Wednesday 2 October 2013

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி = அஹிம்சாமூர்த்தி + மாகாத்மா = ஏகாதிபத்திய அடிமை + பார்ப்பன பாசிஸ்ட்



மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி = அஹிம்சாமூர்த்தி + மாகாத்மா

= ஏகாதிபத்திய அடிமை + பார்ப்பன பாசிஸ்ட்


நாக்கில் கடவுளின் பெயரையும் கையில் கத்தியையும் வைத்திருக்கும் ஒரு மனிதனை மகாத்மா என்று ழைத்தால், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியையும் மகாத்மா என்றே அழைக்கலாம்” 


வை டாக்டர். அம்பேத்கர் காந்தியைப் பற்றி வெடித்துக் கூறிய வார்த்தைகள். டாக்டர். அம்பேத்கர் இவ்வாறு வெடிக்கக் காரணம், காந்தியின் மீதான  தனிப்பட்ட வெறுப்போ அல்லது பதவித் தகறாரோ அல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனது வாழ்நாள் முழுவதும் துரோகம் இழைத்த காந்தியின் பார்ப்ன பாசிசக் கொடுங்கோன்மைக்கு எதிராக அம்பேத்கர் உள்ளம் கொதித்து கொட்டிய வார்த்தைகளே இவை. இந்தியாவின் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களை ”கடவுளின் குழந்தைகள் (ஹரிஜன்)” என்று பெயரிட்டு அழகு பார்த்த காந்தியை அம்பேத்கர் அவ்வாறு கூறியது அதிர்ச்சியளிக்கிறது அல்லவா?. அதிர்ச்சியிலிருந்து மீள மஹாத்மா என்றும் அஹிம்சா மூர்த்தி என்றும் வானளாவ புகழப்படும் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியின் பொது வாழ்க்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா வரை சற்று பயணிக்கலாமா?


பூணூலால் ஒரு பார்ப்பனிய பாசிச பிணைப்பு


 காந்தி எனும் இனவாதி

                காந்தி தனது 24வது வயதில் தென் ஆப்பிரிக்க உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த இந்திய முதலாளிகளுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீலாகவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாகவும்  தனது சேவையைத் தொடங்கினார். வக்கீலாக தனது தொழிலைத் தொடங்கிய காந்தி அங்கிருக்கும் இந்தியர்களை ஒருங்கிணைத்து ”நேடல் இந்திய காங்கிரஸ்” என்றொரு அமைப்பை உருவாக்கினார். அது மட்டுமன்றி ”இந்தியன் ஒப்பீனியன்” என்றொரு பத்திரிக்கையையும் நடத்தினார். அங்கு நடந்த சில நிகழ்வுகளை இங்கு காணலாம்.  



தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரத்தில் உள்ள தபால் நிலையத்தில் இரண்டு வாயில்கள் இருந்தன. ஒரு வாயில் வெள்ளை நிற வெறியர்களுக்கும் மற்றொறு வாயில் கருப்பினத்தவர்கள் மற்றும் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நமது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் ஒருமுறை தபால் நிலையம் செல்லுகையில், கருப்பினத்தவர்கள் மற்றும் இந்தியர்கள் நுழையும் பாதை வழியாக மட்டுமே நுழைய அனுமதிக்கப்பட்டார். நியாயப்படி பார்த்தால் பிரிட்டிஷ் அரசின் இந்த இனவெறியை எதிர்த்து அனைருக்கும் ஒரே நுழைவுவாயில் கேட்டு போரடியிருக்க வேண்டும். ஆனால் காந்தி செய்தது என்ன? அதை காந்தி எழுதிய கடிதங்களின் வாயிலாகவே பார்க்கலாம்.



1895ம் ஆண்டு காந்தி நேடல் இந்திய காங்கிரஸுக்கு எழுதிய கடிதத்தில் நம்முடைய முன்னால் தலைவர் மூலமாக தபால்தந்தி நிலையங்களில் ஐரோபியர்கள், பூர்வீக்குடியினர் மற்றும் இந்தியர்களுக்கு தனித்தனி நுழைவாயில் அமைக்கவேண்டும் என்று அரசாங்கத்திற்கு மனு கொடுக்கப்பட்டிருக்கிறதுஎன்று குறிப்பிடுகிறார் [Collected Works of Mahatma Gandhi (CWMG), Vol. 1, p. 266]



தபால்நிலையத்தில் அனைவருக்கும் சமமாக ரே நுழைவாயில் வேண்டுமென்று காந்தி போராடவில்லை. மாறாக, கருப்பினத்தவர்களுடன் ஒரே வாயிலை பகிர்ந்து கொள்வதை தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாகக் கருதி இந்தியர்களை கருப்பினர்களோடு ஒப்பிடக்கூடாது என்ற இனவெறியில் தான் இந்தியர்களுக்கு தனியாக ஒரு நுழைவாயில் அமைக்க வேண்டும் என்று போராடியிருக்கிறார். அதில் தான் வெற்றியும் பெற்றதை 1896ம் ஆண்டு கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்  

”இந்த வெறுப்பூட்டும் விதமான வேறுபாட்டை நீக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு கொடுத்தோம் அகையால் அவர்கள் இப்போது தபால்தந்தி நிலையங்களில் ஐரோப்பியர்கள், பூர்வீக்குடியினர் மற்றும் இந்தியர்களுக்கு தனித்தனி நுழைவாயில் அமைத்து தந்தனர்[CWMG, Vol. 1, p. 367-368].
 
நம் அனைவருக்கும் தெரிந்த ”காந்தியின் இரயில் முதல் வகுப்புச் சீட்டுத் தகராறை” இந்த வரலாற்று பின்னணியில் இருந்து தான் நாம் அணுக வேண்டும்.

காந்தி தன்னுடைய எழுத்துக்களில் பூர்வீக கருப்பின மக்களை குறிப்பிடும் போதுகாபிர்’ என்ற கீழ்த்தரமான வார்த்தையாலே குறிப்பிடுகிறார்.
 
போயர் அரசாங்கம் இந்தியர்களை காபிர்களோடு(kaffirs) ஒப்பிட்டு அவமானப்படுத்துகிறதுஎன்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார் [CWMG Vol. V, p. 59].
அஹிம்சாமூர்த்தி காந்தியின் சார்ஜெண்ட் அவதாரம்

கருப்பின மக்களுக்காக காந்தி போராடினார் என்று பேசுவது எல்லாம் வெறும் பொய்களும் கட்டுக்கதைகள் தாம் என்பதை நாம் இங்கே கண்கூடாக காணலாம். காந்தி அங்கிருந்த காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் ஜூலு இன மக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வரி கட்ட மறுத்ததால் அவர்கள் மீது பிரிட்டிஷ் அரசு போர் தொடுத்தது. காந்தி னது இந்தியன் ஒபினியன் (Indian Opinion) என்ற பத்திரிக்கையின் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக போருக்கு ஆட்கள் மற்றும் நிதி திரட்டுவது போன்ற எடுபிடி வேலைகளைப் பார்த்து வந்தார். இத்தகைய விசுவாசமான ஏவல்நாயாக செயல்பட்டதற்குத் தக்க சன்மானமாக ஜூன் 6, 1906 ல் ஜூலு இன மக்களுக்கு எதிரான போரில் காந்திக்கு 20 இந்தியர்கள் அடங்கிய உதவி குழுவின் சர்ஜண்ட். மேஜராக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். இவ்வாறு ஜூலு இன மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு எதிராக செயல்பட்ட காந்தி 1920ல் எழுதிய தனது சுயசரிதையில் இதற்கு நேர்மாறாகநாங்கள் தலைமையகம் அடைந்தவுடன் எங்களுடைய வேலை போரில் அடிபட்ட ஜூலு இன மக்களுக்கு சேவை செய்வதே என்பதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம்என்று பச்சைப் பொய்யை கக்குகிறார். இதிலிருந்தே அவரது சத்திய சோதனையின் யோக்கியதையை அறிந்து கொள்ள முடியும். மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் காந்தியின் இனவெறிக்கு ஒரு சில உதாரணங்களே. இதன் மூலம் அவரது 21 ஆண்டுகால தென்னாப்பிரிக்க வாழ்க்கையில் பூர்வீக ஆப்பிரிக்க மக்களுக்கு எதிராக ஒரு இனவாதியாகவும் , பிரிட்டீஸாருக்கு ஏவல்நாயாவுமே செயல்பட்டார் என்பதை நம்மால் உணரமுடிகிறது

இளம் வயதிலேயே இவ்வளவு கிரிமினல்தனங்களோடு வலம் வந்த காந்தி, பழுத்த பழமாகி இந்தியாவிற்கு திரும்பிய பின் சும்மா இருப்பாரா என்ன ?.

காந்தி எனும் பார்ப்பன பாசிச சனாதானி

ஜாதியை ஒழித்து மேற்கத்திய சமூக அமைப்பை ஏற்றுக்கொண்டால் ஜாதி அடிப்படையிலான பரம்பரைத் தொழிலை இழக்க நேரிடும், இது இந்து தர்மத்தின் மூலத்தையே பாதிக்கக்கூடியது ஆதலால் சமூகத்தில் பெரும் குழப்பம் உண்டாகி இந்த சமூக அமைப்பே உடைந்து போகும் ஆகையால் ஜாதியை எதிர்க்கும் அனைவரையும் நான் எதிர்க்கிறேன்
 
வை ஆர்.எஸ்.எஸ் தலைவரான சாவர்க்கரினுடைய வார்த்தைகள் அல்ல, தேசப்பிதா என்று போற்றப்படும் மகாத்மா உதிர்த்த முத்துக்களாகும் (CWMG, Vol. XIX, p. 83). காந்தி தன்னை ஒரு தேசத்தலைவராக முன்னிறுத்திய அதே சமயத்தில் தன்னை ஒரு இந்து சனாதனியாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டார். அவர் தமது வாழ்வின் அனைத்து தருங்களிலும் ஜாதியையும் வருணாசிரம தர்மத்தையும் விட்டுக் கொடுக்காமல் இந்து மதத்தின் பிற்போக்கான கோட்பாடுகளுக்கு காவலனாகவே இருந்து வந்தார்

எந்த ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர்களும் அறிவியல் மற்றும் கலை தொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ளலாம் ஆனால் வாழ்வாதாரத்திற்கு தன் பரம்பரைத் தொழிலையே பின்பற்ற வேண்டும் அதையே தன் தலையாய கடமையாக கருத வேண்டும்என்று கூறினார். [Chadha, Yogesh: Gandhi A Life, page - 321]

மேலும் ஜாதியை அடிப்படையாக கொண்டதால் மட்டுமே இந்து மதத்தால் நிலைத்திருக்க முடிந்தது என்று நான் நம்புகிறேன்” 

"நான் ஜாதியை வருணாசிரமத்தில் இருந்து பிரித்தே பார்க்கிறேன். தீண்டாமை போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்த ஜாதி அமைப்பை குறை கூறமுடியாது" என்று கூறினார் [CWMG, Vol. LI, p. 199].  

காந்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூனா ஒப்பந்தத்தில் தாழ்த்தப்பட்டவர்களுகான இரட்டை வாக்குரிமைக்கு எதிராக செயல்பட்டது உலகறிந்த விசயம். தன்னுடைய உயிரை குடுத்தேனும் இந்து தர்மத்தை காப்பாற்றுவேன் என்று கூறியதை இரட்டை வாக்குரிமைக்கு எதிரான தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலமாக தாழ்த்தப்பட்டவர்களின் உயிரை எடுத்தேனும் இந்து சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவேன் என்று நடைமுறையில் நிரூபித்துக் காட்டினார். தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக நிலை நிறுத்தி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரா அல்லது உரிமையா என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு அம்பேத்கரைத் தள்ளிக் கொண்டு போய் நிர்பந்தித்து பணியவைத்தார். 

மேற்கூறியவை எல்லாம் காந்தி என்னும் விஷக் கடலிலே இருந்து எடுக்கப்பட்ட சில துளிகள் தான். இன்னமும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான காந்தியின் முகத்தையோ அல்லது அஷராம் பாபு, பிரேமானந்தா, நித்யானந்தா வகையறாக்களுக்கு ஆசிரம தர்மத்தை கற்றுத்தந்த காந்தியின் முகத்தையோ பற்றி இன்னமும் தொடக் கூட இல்லை. 

தனது வாழ்நாள் முழுவதும் ஆளும் வர்கத்திற்கு ஏவல் நாயாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு எதிராகவும் தேச விடுதலைக்கு எதிராகவும் செயல்பட்ட காந்தி அஹிம்சாமூர்த்தி என்றும் , மகாத்மா என்றும் கொண்டாடப்படும் போது ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளை ஏகாதிபத்திய நலன்களுக்காக இரத்தக்காடாக்கிய அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை. 

காலனியாதிக்க காலத்தில் இருந்து இன்றைய மறுகாலனியாதிக்க காலகட்டம் வரையிலும் காந்தியம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியை நீர்த்துப்போகச் செய்யும் ஆளும் வர்க்கத்தின் ஆயுதமாகவே இருக்கிறது. அமெரிக்காவின் ஓபாமா தொடங்கி இங்கு அரசியல் புரோக்கராகத் திரியும் தமிழருவி மணியன் வரையில் அனைவராலும் மகாத்மாவாக காந்தி போற்றப்படுவதற்கு இது தான் காரணம். ஆளும் வர்க்கத்தால் பகத்சிங்கின் வரலாறு இருட்டடிக்கப்பட்டதற்கும், காந்தியின் வரலாறு சத்திய சோதனையாக பீற்றப்படுவதற்கும் காரணம் இப்போது புரிகிறதல்லவா?
 

 Reference : 

www.gandhism.net

Related post :

’மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை

’மகாத்மா’ காந்தி - துரோகத்தின் களர் நிலம்

காந்தி நல்லவரா? கெட்டவரா?

தலித்களை வெறுத்த பாசிச காந்தி

காந்தியம் = அம்பானியம்











 

1 comment:

  1. நல்ல கட்டுரை.
    வாழ்த்துக்கள்.. நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete