Monday, 28 October 2013

விவசாயிகள் தற்கொலை - குஜராத்தின் விவசாய வளர்ச்சி பற்றிய கோர உண்மை      மோடியின்,  குஜராத்தில் விவசாய துறை வளர்ச்சி கண்டுள்ளது என்று (அதிகாரபூர்வ தகவல் ஏதும் இன்றி உத்ரகண்டில் ஒரே நாளில் 15,000 நபர்களை காப்பாற்றியதை போல) தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசாங்கம் கைவிட்டதாலும்   அதிக கடன் சுமை காரணமாகவும் தற்கொலை மூலம் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்கள்.  இந்த கோரசம்பவமானது பல மட்டங்களில் மறைந்துள்ள அதன் கொடூர உணர்வின்மையையும் (காட்டுமிராண்டி தனத்தையும்) மனித உயிர்களை அலட்சியமாக கருதுவதையும் அம்பலப்படுத்துகின்றன.  2003  - 2007 க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 489 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். அதற்கு பின்னர் மோடி நடத்திய விகாஸ் யாத்திரை,  துடிப்பான குஜராத் (Vibrant Gujarat)போன்ற மாநாடுகள் எத்தனை? ஏன் இவைகளால் விவசாயிகள் தற்கொலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை? 2009-2012 இடைப்பட்ட காலத்தில் 112 விவசாயிகள் கூடுதலாக தற்கொலை செய்துகொண்டார்கள், 2012-ல் பருவமழை பொய்த்ததின் காரணமாக, 2012 அக்டோபர்/நவம்பர் க்கு பின்னர் 40-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன,  கடந்த 10 ஆண்டுகளில் அரசாங்க புள்ளி விபரங்களின்படி 641 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் தற்கொலையானது குஜராத்தின் “விவசாய வளர்ச்சி” என்ற மோடியின் மிகைபடுத்தப்பட்ட தம்பட்டங்களை துகிழுரித்து காட்டுகிறது.


 குஜராத் – விவசாயிகள் தற்கொலை

வருடம்
பதிசெய்யப்பட்ட தற்கொலைகளின் எண்ணிக்கை
2003-2007
487
2008-2012
112
2012 – தற்பொழுது வரை
40
மொத்தம்
641

தற்கொலைகளின் மொத்த எண்ணிக்கை 641 ஆக இருப்பதினால், இதை பற்றிய விபரங்களை மறைக்கவும் தற்கொலைகளை பதிவு செய்யாமல் இருப்பதையும் உறுதிசெய்யவேண்டுமென காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்க்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த கோர சம்பவம் நமக்கு உணர்த்தும் உண்மைகள் 1) 600க்கும் மேற்பட்ட அரசாங்கத்தால் கைவிடப்பட்ட ஏழை விவசாயிகள் தங்கள் வாழ்வை தற்கொலை மூலம் முடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள், 2) 2005-ல் குஜராத் மாநில நிர்வாகத்திற்கு அங்கு நிலவுகின்ற துயர நிலைமைகள் குறித்து பலமுறை எச்சரிக்கப்பட்ட போதிலும் அதை கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு செய்திருந்தால் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு கட்டங்களாக நடைப்பெற்ற விவசாய தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம்.  3) இறுதியாக குஜராத்தில் விவசாய வளர்ச்சி என்று போலி ஆதாரங்கள் மூலம் மோடி அரசும் மக்கள் தொடர்பு நிறுவனங்கலும்  சேர்ந்து பொய் பிரச்சாரத்தின் மூலம் இறந்த விவசாயிகளை சிறுமைபடுத்தியுள்ளது. 

செளராஷ்டிராவில் நிகழும் விவசாயிகள் தற்கொலைகள் குறித்து இராகேஸ் சர்மா எனும் ஆவண பட தயாரிப்பாளர் “கேது மோரா ரெ” எனும் ஆவண படத்தை வெளியிட்டுள்ளார், அவர் இது குறித்து கூறும் போது “இங்கு பிரச்சனை என்னவென்றால் காவல்துறை அதிகாரிகள் விவசாய தற்கொலைகளை துல்லியமாக கணக்கிட்டு பதிவு செய்வதில்லை, எனவே இத்தவறான பதிவுகளை சரி செய்வதுதென்பது  இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கஷ்டமான ணியாகும்” என்று கூறினார். இதை உறுதிப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் அதிகாரி Frontline பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் “விவசாயிகள் தற்கொலைகளைகளுக்கு “விளைச்சல் குறைந்தது” தான் கரணம் என்பதற்க்கு பதிலாக “தற்செயலாக நிகழ்ந்த இறப்பாக” பதிவு செய்யுமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் கனுபாய் கன்சாரியா எனும் பி.ஜே.பி எம்.ல்.ஏ குஜராத் மாநிலத்தின் விவசாயம் மற்றும் உப்பு துறையில் உள்ள பிரச்சனைகளை வெளிக்கொண்டுவந்ததிற்காக கட்சியில் இருந்து மோடியால் நீக்கப்பட்டார். இது குறித்து ஒரு விவசாயி “அவர் (மோடி) தன் கட்சிக்காரரையே சகித்துக் கொள்ள முடியாத போது  அவர் எங்களுக்காக என்ன செய்யபோகிறார்? என்று கூறினார்.  மோடிக்கு, மக்கள் தொடர்பு சாதங்களின் ஆதரவு எல்லையற்றது. மோடியின் விவசாய வளர்ச்சி என்று மோடியால் மிகைப்படுத்தப்படும் அதே வேளையில் சௌராஷ்ட்ரா பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி  உள்ளனர். இங்கே  ஒரு பொய் விவசாயிகளின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

நன்றி :


Monday, 21 October 2013

பித்தலாட்ட முதலமைச்சர் மோடியின் பொய் பிரச்சாரங்கள்

குஜராதின் விவசாய வளர்ச்சி பற்றி ஆராயும் போது மந்திர தகவல்கள் எல்லாம் மாயமாகின்றன


      கடந்த இருபதாண்டுகளாக இந்தியாவில் விவசாயத்துறை மிகவும் துயரமான நிலமையில் இருந்து வருவதை பார்க்கிறோம். ஆனால் மோடியும் அவரது பொய் பிரச்சார கும்பலும் குஜராத்தில் விவசாய வளர்ச்சியானது இரட்டை இலக்கத்தை (10%) அடைந்ததாக மார்தட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு மோடியின் பொய்யை பரப்பும் மக்கள் தொடர்பு சாதனங்கள் (public relation machinery)  கூறியதை நம்பி, நம் நாட்டு மக்கள் மோடியை பாராட்டுகின்றனர்.  உண்மையாக சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் விவசாயம்  இவ்வளவு மோசமாக  வீழச்சியடைந்துள்ள நிலையிலும்  குஜராத்தின் விவசாய வளர்ச்சி அவர்கள் கூறியதில் பாதி தவிகிதம்  (5%) அடந்திருந்தாலே அது பாரட்டுக்குறியது.                         
ஆனால், வழக்கம் போல இதுவும் பித்தலாட்டமோடியின் மந்திர புள்ளிவிவரங்கள்.

      இதை இவர்கள் எப்படி செய்தார்கள் என்று பார்ப்போம். முதலில், விவசாயம் மோசமாக இருந்த ஒன்று அல்லது இரண்டு  ஆண்டுகளின் வளர்ச்சி விகிதத்தை எடுத்துக் கொண்டு அதை மற்ற ஆண்டுகளோடு ஒப்பிடுகிறார்கள். தற்செயலாக குஜராத் 1999 மற்றும் 2000 ம் ஆண்டுகளில் கடுமையான பஞ்சத்திற்கு உள்ளானது. பிறகு 2001 லிருந்து 2005 வரையிலான நான்கு ஆண்டுகளில் பெய்த பருவ மழையின் கரணமாக  நல்ல விளைச்சல் இருந்தது.  பிறகென்ன 1999-2000 ஆண்டு வளர்ச்சியை அடுத்த ஐந்தாண்டுகளோடு(2001-2005) ஒப்பிட்டு அதை மிகப்பெரிய வளர்ச்சி என்று கூறவேண்டியதுதானே. 2001-05 ம் ஆண்டுகளின் விவசாய உற்பத்தி கடந்த 1995 அல்லது 1996 ம் ஆண்டுகளின் உற்பத்தியளவே ஆகும், இருந்தாலும் அவை 1999-2000 ம் ஆண்டை விட கூடுதலானதுதானே.


இதில் உள்ள உண்மையோ இன்னமும் எளிமையானது:

      1988 லிருந்து 1998 வரை குஜராத்தின் வருடாந்திர சராசரி விவசாய உற்பத்தி வளர்ச்சி விகிதம் 10% ஆக இருந்தது. 1999 - 2000ல் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக அது முந்தைய ஆண்டுகளின் விவாசாய உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் 30% சதவிகிதம்  குறைந்தது. பித்தலாட்ட மோடியின் இரட்டை இலக்க வளர்ச்சி கூற்றுக்காக மேலும் ஒரு தந்திரம் கையாளப்பட்டது.  அதாவது, பணவீக்கத்தை கணக்கில் கொல்லாமல், நடப்பு ஆண்டின் விலையை மட்டும் (on current price) கொண்டு வளர்ச்சி விகிதத்தை கணகிடுவதாகும். (டைம்ஸ் ஆஃப் இந்தியா, Nov , 10, 2010).  முறையாக அனைத்து தரவுகளையும் கருத்தில் கொண்டு கணக்கிட்டால் 2001 முதல் 2009 ஆண்டு வரையிலான விவசாய வளர்ச்சி விகிதம்  மோடி பொய்யாக வெளியிட்ட வளர்ச்சி விகிதத்திற்க்கு (9.6%) (இதை உடனே அவர் 10% என்றார், அப்போதுதானே இரட்டை இலக்கு வளர்ச்சியை எட்ட முடியும்!!!) மாறாக 4% சதவிகித வளர்ச்சி விதம் மட்டுமே குஜராத் அடைந்திருக்கிறது. . இந்த 4% வளர்ச்சி விகிதமானது குஜராத்தினுடைய விவசாய உற்பத்திக்கான பதினொராவது ஐந்தாண்டு திட்ட இலக்கை விட 33% குறைவானதாகும்.  என்ன அருமையான வளர்ச்சி. இதை பார்க்கும் போது நாம் அவரை பித்தலாட்ட முதலமைச்சர் மோடி என்றே அழைக்கத் தோன்றுகிறது.நன்றி : Related Posts: