Monday, 21 October 2013

பித்தலாட்ட முதலமைச்சர் மோடியின் பொய் பிரச்சாரங்கள்

குஜராதின் விவசாய வளர்ச்சி பற்றி ஆராயும் போது மந்திர தகவல்கள் எல்லாம் மாயமாகின்றன


      கடந்த இருபதாண்டுகளாக இந்தியாவில் விவசாயத்துறை மிகவும் துயரமான நிலமையில் இருந்து வருவதை பார்க்கிறோம். ஆனால் மோடியும் அவரது பொய் பிரச்சார கும்பலும் குஜராத்தில் விவசாய வளர்ச்சியானது இரட்டை இலக்கத்தை (10%) அடைந்ததாக மார்தட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு மோடியின் பொய்யை பரப்பும் மக்கள் தொடர்பு சாதனங்கள் (public relation machinery)  கூறியதை நம்பி, நம் நாட்டு மக்கள் மோடியை பாராட்டுகின்றனர்.  உண்மையாக சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் விவசாயம்  இவ்வளவு மோசமாக  வீழச்சியடைந்துள்ள நிலையிலும்  குஜராத்தின் விவசாய வளர்ச்சி அவர்கள் கூறியதில் பாதி தவிகிதம்  (5%) அடந்திருந்தாலே அது பாரட்டுக்குறியது.   



                      
ஆனால், வழக்கம் போல இதுவும் பித்தலாட்டமோடியின் மந்திர புள்ளிவிவரங்கள்.

      இதை இவர்கள் எப்படி செய்தார்கள் என்று பார்ப்போம். முதலில், விவசாயம் மோசமாக இருந்த ஒன்று அல்லது இரண்டு  ஆண்டுகளின் வளர்ச்சி விகிதத்தை எடுத்துக் கொண்டு அதை மற்ற ஆண்டுகளோடு ஒப்பிடுகிறார்கள். தற்செயலாக குஜராத் 1999 மற்றும் 2000 ம் ஆண்டுகளில் கடுமையான பஞ்சத்திற்கு உள்ளானது. பிறகு 2001 லிருந்து 2005 வரையிலான நான்கு ஆண்டுகளில் பெய்த பருவ மழையின் கரணமாக  நல்ல விளைச்சல் இருந்தது.  பிறகென்ன 1999-2000 ஆண்டு வளர்ச்சியை அடுத்த ஐந்தாண்டுகளோடு(2001-2005) ஒப்பிட்டு அதை மிகப்பெரிய வளர்ச்சி என்று கூறவேண்டியதுதானே. 2001-05 ம் ஆண்டுகளின் விவசாய உற்பத்தி கடந்த 1995 அல்லது 1996 ம் ஆண்டுகளின் உற்பத்தியளவே ஆகும், இருந்தாலும் அவை 1999-2000 ம் ஆண்டை விட கூடுதலானதுதானே.


இதில் உள்ள உண்மையோ இன்னமும் எளிமையானது:

      1988 லிருந்து 1998 வரை குஜராத்தின் வருடாந்திர சராசரி விவசாய உற்பத்தி வளர்ச்சி விகிதம் 10% ஆக இருந்தது. 1999 - 2000ல் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக அது முந்தைய ஆண்டுகளின் விவாசாய உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் 30% சதவிகிதம்  குறைந்தது. பித்தலாட்ட மோடியின் இரட்டை இலக்க வளர்ச்சி கூற்றுக்காக மேலும் ஒரு தந்திரம் கையாளப்பட்டது.  அதாவது, பணவீக்கத்தை கணக்கில் கொல்லாமல், நடப்பு ஆண்டின் விலையை மட்டும் (on current price) கொண்டு வளர்ச்சி விகிதத்தை கணகிடுவதாகும். (டைம்ஸ் ஆஃப் இந்தியா, Nov , 10, 2010).  முறையாக அனைத்து தரவுகளையும் கருத்தில் கொண்டு கணக்கிட்டால் 2001 முதல் 2009 ஆண்டு வரையிலான விவசாய வளர்ச்சி விகிதம்  மோடி பொய்யாக வெளியிட்ட வளர்ச்சி விகிதத்திற்க்கு (9.6%) (இதை உடனே அவர் 10% என்றார், அப்போதுதானே இரட்டை இலக்கு வளர்ச்சியை எட்ட முடியும்!!!) மாறாக 4% சதவிகித வளர்ச்சி விதம் மட்டுமே குஜராத் அடைந்திருக்கிறது. . இந்த 4% வளர்ச்சி விகிதமானது குஜராத்தினுடைய விவசாய உற்பத்திக்கான பதினொராவது ஐந்தாண்டு திட்ட இலக்கை விட 33% குறைவானதாகும்.  என்ன அருமையான வளர்ச்சி. இதை பார்க்கும் போது நாம் அவரை பித்தலாட்ட முதலமைச்சர் மோடி என்றே அழைக்கத் தோன்றுகிறது.



நன்றி : 



Related Posts:


No comments:

Post a Comment