சிபிஎம் இன் மாநில பிளீனம்
பாலக்காட்டில் நடந்து முடிந்தது. ஆனால் பிளீன மேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் தெரியாத
தாடிக்காரனின் படம் பற்றி மலையாளப் பத்திரிகைகளில் விவாதம் தொடர்கிறது. ஏங்கல்சைப்
போன்று இருக்கும் இந்த தாடிக்காரருக்கு ஏங்கல்சை விட பெரிய ஏறுநெத்தி. இவரது சொட்டை
டார்வினைப் போன்றிருந்தாலும், டார்வினுக்கு இது போன்ற தாடியில்லை. ஒருசிலர் பிளஹனைவைப்
போன்றிருப்பதாகக் கூறினாலும் உலகில் எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் பிளஹானவை கம்யூனிஸ்ட்
தலைவராக இதுவரை அங்கீகரித்ததில்லை. பானரை அச்சடித்தவர்களுக்கு ஏற்பட்ட பிழை என்கின்றது
சிபிஎம். ஏற்கனவே பிளீனத்தை ஒருங்கிணைக்கும் வேலையை ஏதோ ஈவன்ட் மேனேஜ்மென்ட் குரூப்பிடம்
வழங்கியதாக சிபிஎம் மீது குற்றசாட்டும் எழுந்துள்ளது.
நன்றி:
www.doolnews.com