Friday, 13 December 2013

சிபிஎம் பிளீன மேடையில் அடையாளம் தெரியாத தாடிக்காரன்



சிபிஎம் இன் மாநில பிளீனம் பாலக்காட்டில் நடந்து முடிந்தது. ஆனால் பிளீன மேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் தெரியாத தாடிக்காரனின் படம் பற்றி மலையாளப் பத்திரிகைகளில் விவாதம் தொடர்கிறது. ஏங்கல்சைப் போன்று இருக்கும் இந்த தாடிக்காரருக்கு ஏங்கல்சை விட பெரிய ஏறுநெத்தி. இவரது சொட்டை டார்வினைப் போன்றிருந்தாலும், டார்வினுக்கு இது போன்ற தாடியில்லை. ஒருசிலர் பிளஹனைவைப் போன்றிருப்பதாகக் கூறினாலும் உலகில் எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் பிளஹானவை கம்யூனிஸ்ட் தலைவராக இதுவரை அங்கீகரித்ததில்லை. பானரை அச்சடித்தவர்களுக்கு ஏற்பட்ட பிழை என்கின்றது சிபிஎம். ஏற்கனவே பிளீனத்தை ஒருங்கிணைக்கும் வேலையை ஏதோ ஈவன்ட் மேனேஜ்மென்ட் குரூப்பிடம் வழங்கியதாக சிபிஎம் மீது குற்றசாட்டும் எழுந்துள்ளது

 

நன்றி: www.doolnews.com



Friday, 29 November 2013

குஜராத்தில் மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவாக பிறக்கின்றது என்கிறது மத்திய கணக்கு தணிக்கைத் துறை (CAG)



“1.87 கோடி மக்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மற்றும் சேவை (Integrated child development services- ICDS) திட்டத்தின் மூலம் பயன் பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.


    முதலமைச்சர் நரேந்திர மோடி குஜராத்தை வளர்ச்சிக்கான முன்மாதிரி என்று தன் சொல்திறமையால்  மெருகூட்டினாலும் மத்திய கணக்கு தணிக்கைத்துறை (CAG) மற்றும் மாநில அரசின் நிர்வாகம் அளித்த சமீபத்திய அறிக்கையின் படி ஊட்டச் சத்து குறைபாடு (malnourished) மற்றும் எடை குறைவான (underweight) குழைந்தைகள் குஜராத்தில் இருப்பதை அவ்வரசாங்கம் ஒப்புகொண்டுள்ளது.
குஜராத் அரசாங்கத்தின், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வாசுபென் திரிவேதி சட்டசபையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை  14 மாவட்டங்களில் குறைந்த பட்சம் 6.13 லட்சம் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவு அல்லது மிகவும் ஊட்ட சத்து குறைந்தவார்களாக கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 மாவட்டங்களின் புள்ளிவிவரங்கள் இல்லையென்பதால் அதை பற்றி குறிப்பிடபடவில்லை.  

     குஜராத்தின் வணிக மையமான அகமாதாபாத்தில் தான் அதிக அளவில் 85,000 க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் ஊட்டச் சத்து குறைந்தவர்களாக அல்லது மிகவும் ஊட்ட சத்து குறைந்தவர்களாக உள்ளனர். அமைச்சர் சட்டசபையில் “அகமதாபாத் நகரில் மட்டுமே 54,975 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைவும் மற்றும் 3,860 குழந்தைகள் மிகவும் ஊட்ட சத்து குறைந்தவார்களாகவும் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், மாநில அரசாங்கமானது 2007-2012 ஆண்டுக்கு இடைபட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போதிய ஊட்டச் சத்து உணவுகளை வழங்கியதாக கூறினாலும் 2012 மார்ச் மாத மாதாந்திர வளர்ச்சி அறிக்கையின் படி மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவாக (underweight) உள்ளதாக CAG ன் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.  
குஜராத் மாநிலத்திற்க்கு 75,480 அங்கன் வாடி மையங்கள் தேவை ஆனால் 52,137 மையங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது அதில் 50,137 மட்டுமே செயல்படுகின்றன என்று கணக்கு தணிக்கை துறை அதிகாரி சுட்டிகாட்டுகிறார். இதன் காரணமாக 1.87 கோடி மக்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மற்றும் சேவை (Integrated child development services- ICDS) திட்டத்தின் மூலம் பயன் பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.


ஊட்டசத்து குறைபாடு
 

     பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சரின் பதில் உணர்த்துகிண்ற உண்மையென்ன வென்றால் ஊட்டச் சத்து குறைவானது மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இல்லாமல் குஜராத் மாநிலத்தின் குறுக்கு நெடுக்கு எங்கிலும் பரவியுள்ளது என்பதாகும். எண்ணிக்கையில் அகமாதாபாத் மாவட்டத்திற்க்கு அடுத்ததாக பழங்குடி மாவட்டங்களான வடக்கிலுள்ள பனஸ்கந்தா மற்றும் குஜராத்தின் மையத்திலுள்ள தாகுத் மாவட்டங்கள் முறையே 78,421 மற்றும் 73,384 குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்க்கு சௌராஷ்ட்ரா பகுதியான ஜுனாகத் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 17,263 குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
       

       மேலும், நாட்டின் நீளமான கடற்கரையை கொண்டுள்ள குஜராத்தில் கடலோர பாதுகாப்பு போதுமானதாக இல்லை என அரசாங்கத்தை CAG கடுமையாக சாடியுள்ளது. இப்பகுதிகளில் இரவு நேர ரோந்து போதுமான அளவு இல்லை என்றும் இங்கு ஒரு சில கடல் காவல் நிலையங்களே (Marine police stations) உள்ளன என்பதையும் அதில் போதிய பயிற்ச்சி பெற்ற நபர்கள் இல்லை என்பதையும் சுட்டி காட்டியுள்ளது.

     கட்சு மாவட்டத்தின் 235 கி. மீ நீளமுள்ள கடற்கரை பகுதி பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ளது. இந்த பகுதி முழுமைக்கும் ஒரே ஒரு கடல் காவல் நிலையம் முந்ராவில் உள்ளது. ஆனால் துவாரகா மற்றும் ஹர்ஸத் இடையே ஒரு கடல் காவல் நிலையம் கூட இல்லை என தணிக்கை அதிகாரி சுட்டி காட்டியுள்ளார்.


நன்றி : The Hindu